Wednesday, January 22, 2014

உலக அதிசயங்களை இணையம் மூலம் கண்டு களித்திட கூகிள் தரும் வசதி............

அருங்காட்சியகங்களை மட்டுமல்ல;உலக அதிசயங்களையும் சரித்திர நினைவுச் சின்னங்களையும் கூகிள்(Google) மூலம் கண்டுகளிக்கலாம். அவற்றின் எழிலையும் வரலாற்று மேன்மையினையும் அனுபவித்து மகிழலாம். World Wonders என்னும் பெயரிலான இந்த வசதி, கூகிள் ஆர்ட் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்க்கான இணையத்தளத்தில் உலகின் 18 நாடுகளைச்சேர்ந்த 132 சரித்திர
நினைவுச் சின்னங்கள்,அதிசயங்களைக் கண்டுகளிக்கலாம். அதாவது, குறித்த இடங்களை நேரில்ப் பார்பது போன்றே, அந்த இடங்களை எல்லாம் அவற்றின் நுணுக்கங்களோடு பார்த்து இரசிக்கலாம். காட்சிகள் மிகவும் துல்லியமாக இருப்பதோடு, அவற்றில் கிளிக்(Click) செய்து காட்சியைத் தேவைக்கேற்ப நகர்த்தி எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் பார்க்க முடியும். நேரில் பார்க்கும் போது கூட, இத்தனை துல்லியமாகப் பார்க்க முடியாது என்று சொல்லக் கூடியவகையில் முழுமையான மெய்நிகர் (Virtual) அனுபவத்தினை இந்தக் காட்சிகள் நமக்கு வழங்குகின்றன.
இது உண்மைதானா என்பதை அறிந்திட நீங்களும் ஒருமுறை இந்தத் தளத்திற்க்கு சென்றுதான் பாருங்களேன்.
இணைய முகவரி-http://www.google.com/culturalinstitute/worldwonders

No comments:

Post a Comment

Wel Come !!! computer express