விழுந்து சேதமாகும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பாதுகாத்துக் கொள்ளும்

நோக்கில் ஹொண்டா நிறுவனம் காற்று நிரப்பப்பட்ட பாதுகாப்பு பை (Smartphone Airbag) ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
ஹொண்டா நிறுவனத்தின் வடிவமைப்பாளர்களின் சிந்தனையில், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் கீழே விழும் போது அதற்கு சேதம் ஏற்படாத வண்ணம் காபனீரொட்சைட் வாயு நிரப்பப்பட்ட ஆறு பைகளை கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பையினுள் கையடக்கத் தொலைபேசி இருக்கும் போது பாதுகாப்பாகவும் கையாள்வதற்கு இலகுவாகவும் இருக்கும். இந்நிலையில் ஸ்மார்ட் தொலைபேசிகள் தவறுதலாக கீழே விழும் போது குறித்தப் வாயு நிரப்பட்ட பை தன்னிச்சையாக செயற்பட்டு ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை சேதத்துக்குள்ளாவதிலிருந்து பாதுகாக்கும்.

இதனை தயாரிக்க ஹொண்டா நிறுவன வடிவமைப்பாளர்கள் பல ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி ஆராய்ச்சிகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இருப்பினும் தற்போது சந்தைகளில் குறித்த கையடக்க தொலைபேசிக்கான பையை பெற்றுக்கொள்ள முடியாது. ஹொண்டா நிறுவனம் தமது புதிய கார் ஒன்றை சந்தையில் அறிமுப்படுத்தும் போதே குறித்த கையடக்க தொலைபேசிக்கான பையையும் அறிமுகப்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments:
Post a Comment