Sunday, August 16, 2015

ஜமெயில் மின்னஞ்சலை Track செய்வது எப்படி?



ஜிமெயில் (Gmail) மின்னஞ்சல் சேவையை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படிப் பயன்படுத்தும் அன்பா்கள் தாங்கள் அனுப்பிய மின்னஞ்சல் பெறுநரால் திறந்து பார்க்கப் பட்டதா என்பதை எப்படி அறிந்து கொள்வது? இதனைச் செய்வதற்கு RightInbox என்ற நீட்சி (Extension) உதவுகிறது. இந்த நீட்சியானது கூகிள் குரோம், நெருப்பு நரி மற்றும் சபாரி ஆகிய இணைய உலாவிகளுக்கு ஆதரவு தருகின்றது. இதனை நிறுவிய பின் ஜிமெயிலை திறந்து புதிதாக ஒரு மின்னஞ்சலை எழுத Compose என்ற பொத்தானை அழுத்தினால் Send Now என்ற பொத்தானோடு புதிதாக வேறு சில பொத்தான்களும் தோன்றியிருப்பதைக் காணலாம். image நீங்கள் புதிதாக மின்னஞ்சலை தயார் செய்த பின் மறக்காமல் Track என்பதை தெரிவு செய்து Send Now ஐ அழுத்துங்கள். அவ்வளவு தான். உங்கள் மின்னஞ்சல் பெறுநரால் திறக்கப்ட்டால் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்து சேரும். RightInbox ஆனது வேறு பல வசதிகளையும் தருகின்றது. Send Later என்பதைப் பயன்படுத்தி ஒரு மின்னஞ்சலை பிறிதொரு தினத்தில் அல்லது நேரத்தில் அனுப்பமுடியும். அத்துடன் Remind Me என்பதை தெரிவு செய்வதன் மூலம் உங்கள் மின்னஞ்சலை நினைவு படுத்தச் செய்யலாம்.

download

No comments:

Post a Comment

Wel Come !!! computer express