Monday, January 27, 2014

இலவச Antivirus 'களில் எது சிறந்தது?


இலவச Antivirus புரொகிராம்களில் எது சிறந்தது என்று கேட்டால் அனைவரும் கூறுவது avast 'தான்.  ஆனால் நான் பயன்படுத்தி பார்த்ததில் அதிக வைரஸ்களை அழித்து.  மெமரியும் குறைவாகப் பயன்படுத்தி முதலிடம் பிடித்தது Avira 'தான்.  ஏன் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.


 AVIRA




  1. அற்புதமான இலவச Antivirus.  விலை கொடுத்து வாங்கும் ஆன்டிவைரசே சில வைரஸ்களை கோட்டை விடுகையில் இலவச ஆன்டிவைரஸான Avira பெரும்பாலான வைரஸ்களை முழுமையாக‌ அழிக்கிறது.  
  2. குறிப்பாக New Folder.exe போன்ற வைரஸ்களை அழிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.  
  3. வெறும் 2MB யிலிருந்து 4MB வரையே மெமரியை எடுத்துக்கொன்டு கணினியை பாதுகாப்பதில் திற‌ம்பட செயல் படுகிறது.
  4. இதற்கான அப்டேட்டுகளை நாம் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  5.                                                                                                                    
                                                                                         Download link

 AVAST

  1.  பலராலும் பயன்படுத்தப்படும் அற்புதமான இலவச ஆன்டிவைரஸ் என்னுடய மதிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 
  2. ஒரு சில வைரஸ்களை விட்டுவிடுகிறது.  எடுத்துக்காட்டாக ( New Folder.exe, Recycler ) போன்ற வைர்ஸ்களை கண்டுபிடிப்பதே இல்லை.   
  3. வைரஸ்களை களைய‌ நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது.  இதுவும் அதிக மெமரியை எடுத்துக் கொள்ளவில்லை.
  4. சில வினாடிகளில் தாமாகவே அப்டேட் செய்து கொள்ளும்.

                                                                                        Download Link


AVG

  1. AVG Antivirus பயன்படுத்தினால் விண்டோஸ் துவங்குவதற்க்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
  2. இது குறைவாக 30MB மெமரியை ஆக்ரமித்துக் கொண்டது.
  3. இதுவும் வைரஸ்களை களைவதில் சிறப்பாக செயல்படுகிறது.
  4. இதனுடய இன்டெர்ஃபேஸ் சற்று பழயதாக இருக்கும்.

                                                                                     Download Link





No comments:

Post a Comment

Wel Come !!! computer express