Thursday, January 30, 2014

மென்பொருள்களின் சீரியல் எண்களை அறிய Licence Crawler மென்பொருள்-தமிழில்

உங்கள் கணினியில் பல்வேறான மென்பொருள்களை நிறுவிப் பயன்படுத்துவீர்கள். அதில் இலவச மற்றும் கட்டண மென்பொருட்கள் அடங்கும்.
    கட்டணம் செலுத்தி வாங்கும் மென்பொருள்களும்(Licensed Softwares) வைத்திருப்பீர்கள். இந்த மாதிரி மென்பொருள்களை வாங்கும் போது அதன் சீடி பெட்டியில் அனுமதி எண்கள்(License Key) இருக்கும்.  அல்லது மின்னஞ்சல் மூலம் அவ்வெண்கள் அனுப்பப்படும்.
     இதில் அதிகமானவர்கள் இந்த முக்கிய லைசன்ஸ் எண்களை தனியாக

குறித்து வைத்திருக்க மாட்டார்கள்.
      வைரஸ் காரணமாக கணினி செயலிழக்கும் போதோ அல்லது கணினியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை போர்மட்(Format) செய்யும் போது மறுபடியும் ஏற்கனவே கணினியில் நிறுவப்பட்டிருந்த மென்பொருள்களை நிறுவ வேண்டியிருக்கும்.
     அப்போதுதான் மென்பொருள்களின் சீரியல் எண்(Serial No) எங்கே என்று தெரியாமல்த் தேட வேண்டடியிருக்கும். இதற்க்காக உதவக் கூடிய ஓர் இலவச மென்பொருள் தான் Licence Crawler.
       இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியில் நிறுவப்படடிருக்கும் கட்டண மென்பொருள்களின் அனுமதி எண்களை (License Key) சில விநாடிகளில் கண்டறியலாம். பின்னர் அதனை எழுதி வைத்துக்கொள்ளலாம் அல்லது Text கோப்பாக சேமித்துக் கொள்ளலாம்.
                            Download>>>
       இந்த மென்பொருளைத் தரவிறக்கி (Download) Licence Crawler என்ற கோப்பைத் திறக்கவும் இதில் Computer என்பதில் Localhost எனவும் அதற்குக் கீழே  HKEYLOCALMACHINE என்று தெரிந்துகொள்ளவும்.
         பின்னர் Start Search என்பதைக் கிளிக் செய்தால் மென்பொருள்களின் பெயர் மற்றும் லைசன்ஸ் பெயர்,எண்கள் பட்டியலிடப்படும். இதில் உங்கள்
விண்டோஸ் உரிம எண்(windows licence No) , MS Office போன்ற மென்பொருள்களின் அனுமதி எண்களும் கிடைக்கும். Save கொடுத்து ஒரு கோப்பில் எல்லாவற்றையும் சேமித்துக்கொள்ளலாம்.
        எளிமையான இம்மென் பொருளை கணினியில் நிறுவாமலேயே பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கதோன்றாகும்.

No comments:

Post a Comment

Wel Come !!! computer express